ஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா; 95 பேர் பலி

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 95 பேர் கரோனாவிற்கு உயிரிழந்தனர்.

News image

மகாராஷ்டிரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா; 95 பேர் பலி (கோப்புப்படம்)

Updated On :5 டிசம்பர் 2020, 3:00 pm

மகாராஷ்டிரத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதிதாக 95 பேர் கரோனாவிற்கு உயிரிழந்தனர்.

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் மகாராஷ்டிரத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மகாராஷ்டிர சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 4,922 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,47,509-ஆக அதிகரித்துள்ளது.


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 82,849 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனாவால் பாதிக்கப்படடு 5,834 பேர் புதிதாக  குணமடைந்ததால், இதுவரை மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 17,15,884-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 95 பேர் பலியானதால், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47,694-ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் மட்டும் புதிதாக 758 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,85,267-ஆக அதிகரித்துள்ளது. மும்பையில் மட்டும் புதிதாக 19 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.