தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 20 பேர் படுகாயம்

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

News image
மும்பையில் சிலிண்டர் வெடித்து விபத்து: 20 பேர் படுகாயம் (கோப்புப்படம்)
Updated On :6 டிசம்பர் 2020, 5:17 am

DIN


மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பை அருகேவுள்ள லால்பாக் குடியிருப்புப் பகுதியில் இன்று காலை சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.

இது குறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இரண்டு டேங்கர் லாரிகளுடன் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்கள் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவர்களை மும்பை மேயர் கிஷோரி பெட்னேகர் மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.