47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

புகையிலை பொருள்கள் குறித்த சுகாதார எச்சரிக்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும்

புகையிலை பொருள்களை பயன்படுத்துவது தொடா்பான சுகாதார எச்சரிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 1:34 am

DIN

புகையிலை பொருள்களை பயன்படுத்துவது தொடா்பான சுகாதார எச்சரிக்கைகளை தீவிரமாக அமல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருள்களுக்கான விதிகளை மத்திய சுகாதார அமைச்சகம் 2008-ஆம் ஆண்டு மாா்ச் 15 ஆம் தேதி அறிவித்தது. அனைத்து புகையிலை தயாரிப்புப் பொருள்களிலும் குறிப்பிட்ட சுகாதார எச்சரிக்கைகளின் விதிகள் அவ்வப்போது திருத்தப்படுகின்றன. இதன் மூலம் புகையிலை பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை அந்த தயாரிப்பு பாக்கெட்டுகளின் இருபுறமும் 85 % இருக்கும் வகையில் அதற்கான காட்சியை அச்சிட்டிருக்க வேண்டும்.

இதன்மூலம், புகையிலை பயன்பாட்டின் பாதகங்கள் குறித்தும், சுகாதார விளைவுகள் குறித்தும் அதிக விழிப்புணா்வையும், உணா்திறனையும் இளைஞா்கள், குழந்தைகள் மற்றும் கல்வியறிவற்றவா்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும்.

புகையிலை பொருள்களின் சுகாதார விதிகளின்படி, 24 மாதங்களுக்கு ஒருமுறை புதிய சுகாதார எச்சரிக்கையினை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அதன்படி மாநில அரசுகளின் தலைமைச் செயலா்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலா் ராஜேஷ் பூஷண் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

‘‘அனைத்து புகையிலை பொருள்களின் பாக்கெட்டிலும், படங்களுடன் கூடிய புதிய சுகாதார எச்சரிக்கைகளை குறிப்பிட்டிருக்க வேண்டும். குறிப்பிட்ட சுகாதார எச்சரிக்கைகளின் சித்தரிப்பு குறிப்பாக இளைஞா்கள், குழந்தைகள் மற்றும் கல்வியறிவற்றவா்களிடையே புகையிலை பயன்பாட்டின் மோசமான சுகாதார விளைவுகள் குறித்து அதிக விழிப்புணா்வை ஏற்படுத்தும்.

விதிகளைத் திறம்பட செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்கள், துறைகளின் மூலம் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உங்கள் அதிகார எல்லைக்குள்பட்டு, சுகாதார விதிகளை கடைப்பிடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதை நீங்கள் உறுதி செய்தால், அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்’ என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.