ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

கேரளத்தில் ஒரேநாளில் 4,777 பேருக்கு கரோனா; 28 பேர் பலி

கேரளத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்.

Updated On :6 டிசம்பர் 2020, 3:32 pm

கேரளத்தில் புதிதாக 4,777 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அந்த தகவலின் படி, மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,777 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதனால் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6,36,392ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 60,924 சிகிச்சை பெற்று வருகின்றனர். கரோனா பாதிப்பிலிருந்து இன்று 5,217 பேர் குணமடைந்தனர். 
இதன்மூலம் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,27,911 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம், கரோனாவுக்கு இன்று 28 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2,418 ஆக அதிகரித்துள்ளது. 
மேலும் இன்று மட்டும் 51,893 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.