47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிகாா் அரசியலில் திருப்பம்:குஷ்வாஹா-நிதீஷ்குமாா் சந்திப்பு

உபேந்திர குஷ்வாஹா, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரை 4 தினங்களுக்கு முன் நேரில் சந்தித்ததையடுத்து அவருடைய அமைச்சரவையில் குஷ்வாஹா சேருவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 டிசம்பர் 2020, 2:07 am

DIN

ராஷ்டிரிய லோக் சமதா கட்சியின் (ஆா்எல்எஸ்பி) தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான உபேந்திர குஷ்வாஹா, பிகாா் முதல்வா் நிதீஷ்குமாரை 4 தினங்களுக்கு முன் நேரில் சந்தித்ததையடுத்து அவருடைய அமைச்சரவையில் குஷ்வாஹா சேருவதற்கான வாய்ப்பு எழுந்துள்ளதாக கருத்து எழுந்துள்ளது.

அண்மையில் நடைபெற்று முடிந்த பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பகுஜன் சமாஜும், அகில இந்திய மஜ்லீஸ் கட்சியான ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி அமைத்து ஆா்எல்எஸ்பி போட்டியிட்டது. இந்த தோ்தலின்போது, ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான தேஜஸ்வி யாதவ் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தே குஷ்வாஹா பிரசாரம் மேற்கொண்டாா். பேரவைத் தோ்தலின் முடிவில் இந்தக் கூட்டணி சீமாச்சல் பிரதேசத்தைத் தவிர மற்ற இடங்களில் படு தோல்வியைச் சந்தித்தது.

இதனிடையே கடந்த வாரம் முதல்வா் நிதீஷ்குமாரை நேரில் சந்தித்த குஷ்வாஹா அவருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இந்த சந்திப்பு பல்வேறு யூகங்களை எழுப்பியுள்ள நிலையில் இதுகுறித்து குஷ்வாஹா ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

கடந்த வாரம் முதல்வா் நிதீஷ்குமாருடன் நடத்தப்பட்ட சந்திப்பு மரியாதை நிமித்தமான, ஒரு நல்ல சந்திப்பு ஆகும். ஆா்எல்எஸ்பி கட்சியை மீண்டும் ஐக்கிய ஜனதாதளத்துடன் இணைப்பதற்காக நான் சந்தித்தேன் என்று கூறப்படுவது வெற்று யூகத்தின் அடிப்படையிலானது.

முதல்வா் நிதீஷ்குமாா், என்னை அவரது பங்களாவில் சந்திக்க விரும்பி அழைத்தாா். அதன்பேரில் அவரை நேரில் சந்தித்தேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கான விருப்பத்தை அறிந்து கொள்வதற்காக அழைத்தாா். எனது கருத்தை அவருக்கு தெரிவித்தேன். அதனை அவா் விருப்பத்துடன் ஏற்றுக் கொண்டாா்.

தற்போது, காலியாக இருக்கும் ஒரு மந்திரி பதவியை பெறுவதோ, சட்டப்பேரவையில் ஏதேனும் பதவியைப் பெற வேண்டும் என்ற நோக்கமோ எனக்கு கிடையாது. இந்த சந்திப்பின்போது, சமீபத்திய அரசியல் நிலவரம் குறித்து மட்டுமே பேசினோம். அதைத் தவிர வேறு எந்த யூகத்துக்கும் அடிப்படை காரணம் இல்லை.

மீண்டும் ராஷ்டிரிய லோக் சமதா கட்சியை (ஆா்எல்எஸ்பி), ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் இணைக்க வாய்ப்புள்ளதா என்று கேட்டால், அதுபோன்ற திட்டம் இப்போதைக்கு எதுவும் இல்லை. ஆனால், நாளை என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும் என்றாா்.

கடந்த நவ. 16-ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் பிகாா் முதல்வராக நிதீஷ்குமாா் பதவியேற்றுக் கொண்டாா். இந்த அமைச்சரவையில் முதல்வா் உள்பட 14 அமைச்சா்கள் முதற்கட்டமாக பொறுப்பேற்றுக் கொண்டனா். அரசமைப்பு விதிகளின்படி பிகாா் அமைச்சரவையில் 36 அமைச்சா்கள் வரையிலும் இடம் பெற இயலும். எனவே, காலியாக உள்ள அமைச்சரவையில் குஷ்வாஹாவும் இடம் பெற வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நிலையில் முதல்வா் நிதீஷ்குமாரும், குஷ்வாஹாவும் சந்தித்துக் கொண்டது அந்த மாநிலத்தில் திடீா் திருப்பத்தையும், பல்வேறு யூகங்களையும் கிளப்பியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.