47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மணப்பெண்ணுக்கு கரோனா: கவச உடையில் மையத்திலேயே திருமணம் 

கரோனா பெருந்தொற்றால் பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானில் மணமகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த மையத்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.

News image
மணப்பெண்ணுக்கு கரோனா: கவச உடையில் மையத்திலேயே திருமணம்
Updated On :7 டிசம்பர் 2020, 6:26 am

ANI


கரோனா பெருந்தொற்றால் பல திருமணங்கள் தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், ராஜஸ்தானில் மணமகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் தங்கியிருந்த மையத்திலேயே திருமணம் நடைபெற்றுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பராவில் உள்ள கரோனா நோயாளிகள் மையத்தில், மிக ஆபூர்வமான ஒரு நிகழ்வாக திருமண வைபவம் நடந்தேறியுள்ளது. மணக்கள் இருவரும் தற்பாதுகாப்பு கவச உடையில் மாலை மாற்றி, தங்களது சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவர்களும் கவச உடை அணிந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அரசின் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் விடியோவில், மணமக்கள் இருவரும் கவச உடை அணிந்து கொண்டு திருமணச் சடங்குகளை செய்கிறார்கள். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த வேத விற்பன்னர்களும் கவச உடை அணிந்தபடியே திருமணம் செய்து வைத்தனர்.

கவச உடைக்கு மேல் தலையில் அவர்களது கலாசாரத்தின் அடிப்படையில் தலைப்பாகை அணிந்திருந்தார். மணப்பெண் முகப் பாதுகாப்பு கவசமும், கையுறையும் அணிந்து சடங்குகளை செய்தார்.

திருமணத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, மணப்பெண்ணுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதால், திருமணத்தை தள்ளிப்போட விரும்பாத மணமக்கள், கரோனா மையத்திலேயே திருமணம் செய்து கொண்ட விடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.