தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 

News image
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றத்திற்கு மரண தண்டனை: மகாராஷ்டிர அமைச்சரவை ஒப்புதல்
Updated On :10 டிசம்பர் 2020, 10:00 am

DIN

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்கும் மசோதாக்களுக்கு மகாராஷ்டிர அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. 

மகாராஷ்டிரத்தில் புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் மாநில அரசால் 2 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து அந்த மசோதாக்களுக்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கும் இந்த மசோதாக்கள் டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இவை சட்டமாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு சக்தி சட்டம் என அழைக்கப்படும்.

இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் யஷோமதி தாக்கூர், “இது வரலாற்று முடிவு. இந்த சட்டம் எங்கள் மாநிலத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க உதவும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.