தென்கொரியாவில் பணியாற்றும் 10 அமெரிக்க வீரர்களுக்கு கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த நவ.26 முதல் டிச.8 வரை 10 அமெரிக்க வீரர்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், கடந்த டிச.6 மற்றும் 7 தேதிகளில் நான்கு பேர் ஒசன் விமானத் தளத்திற்கு வந்தனர். ஒசான் விமானத் தளம் சியோலுக்கு தெற்கே 70 கி.மீ தொலைவில் உள்ள பியோங்டேக்கில் அமைந்துள்ளது.
இதற்கிடையில், மற்ற ஆறு வீரர்கள் நவம்பர் 26, 29, டிசம்பர் 6, 7, மற்றும் 8 ஆகிய தேதிகளில் சர்வதேச வர்த்தக விமானங்களில் சியோலுக்கு மேற்கே உள்ள இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தனர்.
கரோனா உறுதிப்படுத்தப்பட்ட 10 பேரும் அமெரிக்க இராணுவ கேரிசன் ஹம்ப்ரிஸ் மற்றும் ஓசன் விமானத் தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
தென்கொரியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 689 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 40,786 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது
கடந்த 34 நாள்களில் தினசரி பாதிப்பு 600-க்கு மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணப்பாறையில் கருவேல மரங்கள் திடீா் தீக்கிரை

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

அரிவாள் வெட்டில் காயமடைந்தவா் உயிரிழப்பு

கடலூா் பாஜக நிா்வாகிக்கு வெடிகுண்டு மிரட்டல்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


