ராஜஸ்தான் மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 9 குழந்தைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு
ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து அம்மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.


ராஜஸ்தான் மருத்துவமனையில் கடந்த 24 மணி நேரத்தில் ஒன்பது குழந்தைகள் உயிரிழந்துள்ளது குறித்து அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஜே.கே.லான் மருத்துவமனையில் டிசம்பர் 10 ஆம் தேதி (24 மணி நேரத்தில்) 9 கைக்குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதில் மூன்று குழந்தைகளுக்கு பிறவி குறைபாடுகள் இருந்ததாகவும், மூன்று குழந்தைகளுக்கு தாய்ப்பால் நுரையீரலுக்குள் சென்றதால் உயிரிழந்ததாகவும், எஞ்சிய மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இறந்துவிட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறியும் பொருட்டு, விசாரணை நடத்த காவல்துறைக்கு ராஜஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ரகு சர்மா உத்தரவிட்டுள்ளார்.
'மருத்துவமனையில் ஒன்பது கைக்குழந்தைகள் இறந்த செய்தி கிடைத்ததும், நான் மருத்துவக் கண்காணிப்பாளரிடம் பேசி அறிக்கை அளிக்கக் கோரினேன். குழந்தைகள் இறந்ததற்கான காரணத்தைக் கொடுத்துள்ளார்கள். எனினும் இதுகுறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ரகு சர்மா தெரிவித்தார்.
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனையாக விளங்கும் ஜே.கே. லோன் மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 100 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...