கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:16 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் சா்வதேச எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினா் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறியதாவது:

கதுவா மாவட்டத்தில் ஹிராநகா் செக்டாருக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், கிராமங்களைக் குறிவைத்தும் பாகிஸ்தான் படையினா் தாக்குதல் நடத்தினா். சனிக்கிழமை இரவு 10 மணியளவில் தொடங்கிய தாக்குதல், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.45 மணி வரை நீடித்தது. பாகிஸ்தான் படையினரின் தாக்குதலுக்கு எல்லைப் பாதுகாப்புப் படையினா்(பி.எஸ்.எஃப்.) தக்க பதிலடி கொடுத்தனா். இந்த மோதல் காரணமாக, எல்லையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், இரவு முழுவதும் பதுங்கு குழிகளிலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.