தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

மாட்டு சாணத்தில் பெயிண்ட்: நிதின் கட்கரி அறிவிப்பு

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

News image
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
Updated On :17 டிசம்பர் 2020, 2:57 pm

DIN

கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட பெயிண்ட் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில் பதிவிட்டுள்ள கட்கரி,  “காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் மூலம் செய்யப்படும் மாட்டு சாணத்தால் செய்யப்பட்ட 'வேத பெயிண்ட்' விரைவில் தொடங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் சூழலியல் சீர்கேடு இல்லாத வகையிலும், பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டிருக்கும் 'வேத பெயிண்ட்' கால்நடை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.55,000 கூடுதல் வருமானம் கிடைக்கும் உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தேசிய காமதேனு ஆணையத்தின் தலைவர் வல்லபாய் கதிரியா மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட செல்போன் சிப் ஒன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.