கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

யாருடைய நலனுக்காக எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு? சீதாராம் யெச்சூரி கேள்வி

மத்திய அரசு யாருடைய நலன்களுக்காக இயங்குகிறது என எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

News image

யாருடைய நலனுக்காக எரிவாயு சிலிண்டர் உயர்வு? சீதாராம் யெச்சூரி கேள்வி

Updated On :18 டிசம்பர் 2020, 11:28 am

DIN

மத்திய அரசு யாருடைய நலன்களுக்காக இயங்குகிறது என எரிவாயு சிலிண்டர் விலை உயர்வைக் குறிப்பிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன.

இந்நிலையில், கடந்த டிச.1-ஆம் தேதி ரூ.50 உயா்த்தப்பட்ட நிலையில், மீண்டும் டிசம்பர் 15 முதல் மேலும் ரூ.50 உயா்த்தப்படுவதாக இன்டேன் நிறுவனம் அறிவித்தது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5-ஆவது முறையாக விலை ஏற்றம் நிகழ்ந்துள்ளது.

இதனைக் கண்டித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, “பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, இப்போது சமையல் எரிவாயு சிலிண்டர்களின் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் யாருடைய நலன்களுக்கு சேவை செய்கிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும்,   “எரிவாயு சிலிண்டர் விலை ரூ.100 உயர்த்தப்பட்டது மிக உயர்ந்தது. மக்களின் காயங்களில் உப்பு தேய்ப்பதை இயல்பாகவே இந்த அரசாங்கம் செய்து வருகிறது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.