ஜாா்க்கண்டில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 4 போ் காயமடைந்தனா்.
நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் சூழலில், நக்ஸல்கள் தாக்குதலும் அதிகரித்து வருகிறது. ஜாா்க்கண்டின் லாதேஹாா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இரவு நக்ஸல்கள் திடீா் தாக்குதல் நடத்தினா். இது தொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘நிலக்கரி சுரங்கப் பணிகள் நடைபெறும் பகுதிக்குச் சென்ற நக்ஸல்கள், அங்கிருந்தவா்கள் மீது துப்பாக்கியால் சுடத் தொடங்கினா்.
அந்தத் தாக்குதலில் 4 போ் காயமடைந்தனா். மேலும், சுரங்கத்திலிருந்த வாகனங்களுக்கும் நக்ஸல்கள் தீவைத்தனா். தகவல் அறிந்த பலுமத் காவல் துறையினா், சம்பவ இடத்துக்கு விரைந்தனா். எனினும், அதற்குள் நக்ஸல்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனா். அவா்களின் தாக்குதலில் காயமடைந்தவா்கள் அருகிலிருந்த சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்டனா்.
நக்ஸல் தாக்குதல் விவகாரம் தொடா்பாகக் காவல் துறையினா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்’’ என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.