ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நிறைவு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது.

News image
காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் நிறைவு (கோப்புப்படம்)
Updated On :19 டிசம்பர் 2020, 11:45 am

DIN

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தில்லியில் நடைபெற்ற காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூட்டம் நிறைவு பெற்றது.

தலைநகரான தில்லியில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் தேர்வு செய்வது குறித்தும், சட்டமன்ற தேர்தல் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் பிரித்வி ராஜ், ''கட்சியின் எதிர்காலம் குறித்து கூட்டத்தில் விவாதித்தோம். மூத்தத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆக்கப்பூர்வமாக அமைந்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் கட்சியின் நிலை குறித்தும், வலுப்படுத்த வேண்டிய வழிமுறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.'' என்று கூறினார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் அஷோக் கெலாட், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, பி.எஸ். ஹூடா, அம்பிகா சோனி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.