மேற்கு வங்கம்: சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகேவுள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.


பாங்கர்: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா அருகேவுள்ள சந்தையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
பர்கனாஸ் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கட்டக்புகூர் சந்தையில் சனிக்கிழமை காலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பாங்கர் பகுதியிலுள்ள அந்த சந்தையில், தீ விபத்து ஏற்பட்ட கடையின் வெளியே மண்ணெண்ணெய் பேரல் இருந்ததால், அருகில் இருந்த கடைகளுக்கும், வீடுகளுக்கும் அடுத்தடுத்து தீ பரவியது.
தீ விபத்து ஏற்பட்ட கடையில் 51 வயதான முதலாளி உள்பட மூன்று பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர். தீ விபத்தில் கடையினுள் இருந்த விலைமதிப்புள்ள பொருள்களை எடுக்கச் சென்றவர்கள் மீண்டும் திரும்பவில்லை.
அவர்கள் தீ விபத்தில் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் 3 வாகனங்களில் வந்த தீயணைப்புத் துறையினர் 5 மணிநேர போராட்டத்திற்கு பிறகு தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், இதில் லட்சக் கணக்கில் மதிப்புடைய பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...