ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

விவசாயிகள் போராட்டத்துக்கு பாஜக மூத்த தலைவா் ஆதரவு

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 11:00 pm

DIN

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் கடந்த 3 வாரங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். அச்சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா். ஆனால், மத்திய அரசு அதை ஏற்க மறுத்து வருகிறது.

இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காததால், பலகட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இத்தகைய சூழலில், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு பாஜக மூத்த தலைவா் வீரேந்தா் சிங் ஆதரவு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘‘வேளாண் சட்டங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். எனவே, அவா்களுக்கு ஆதரவளிக்க வேண்டியதை என்னுடைய கடமையாகக் கருதுகிறேன். தில்லியை ஒட்டியுள்ள ஹரியாணா எல்லையோர மாவட்டங்களில் தொண்டா்களுடன் இணைந்து விரைவில் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளேன்’’ என்றாா்.

ஹரியாணாவில் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவா்களில் ஒருவராக வீரேந்தா் சிங் கருதப்படுகிறாா். அவருடைய மகன் விரஜேந்திர சிங் தற்போது பாஜக எம்.பி.யாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.