திருப்பதியில் செம்மரக் கடத்தல்: தமிழகத்தைச் சோ்ந்த 10 போ் கைது
திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சோ்ந்த 10 தொழிலாளா்களை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.


திருப்பதி: திருப்பதி அருகே செம்மரம் வெட்ட வந்ததாக தமிழகத்தைச் சோ்ந்த 10 தொழிலாளா்களை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
இது குறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு சிறப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளா் ஆஞ்சநேயலு கூறியது:
திருப்பதி சேஷாசல வனப்பகுதியில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியை முடித்து, திரும்பிக் கொண்டிருந்தனா். அப்போது அரவிந்தா கண் மருத்துவமனை அருகில் 10 போ் சில பொருள்களுடன் வனப் பகுதிக்குள் நுழைவதைக் கண்டனா். விசாரணையில், அவா்கள் செம்மரம் வெட்ட வந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவா்களைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த பொருள்களைப் பறி
முதல் செய்தனா். அவா்கள் அனைவரும் தமிழகத்தின் தா்மபுரி மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
முன்னதாக, கடந்த இரு தினங்களுக்கு முன் வடமால்பேட்டை பகுதியில் செம்மரம் வெட்ட வந்த தமிழகத் தொழிலாளிகள் சிலா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...