மாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் ஹரியாணா முன்னாள் முதல்வர்

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

News image
ஹரிஷ் ராவத்
Updated On :21 டிசம்பர் 2020, 7:46 am

DIN

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஹரிஷ் ராவத் கலந்துகொண்டு தனது ஆதரவைத் தெரிவித்தார். 

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் விவசாயிகளின் போராட்டம் இன்று 26 ஆவது நாளை எட்டியுள்ளது. தில்லி சிங்கு எல்லையை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் கடும் குளிரிலும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்துள்ள அவர்கள் இன்று முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், ஹரியாணா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஹரிஷ் ராவத் காசிப்பூர் எல்லையில் விவசாய சீர்திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தினார். விவசாயிகள் எதிர்க்கும் சட்டங்களை அரசு திரும்பப் பெறவேண்டுமென்று அவர் கோஷமிட்டார். மேலும் போராட்டத்தின் போது இறந்த விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்வின்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் ராவத்துடன் இருந்ததாக காங்கிரஸ் உறுப்பினர் நரேந்திர ரதி தெரிவித்தார். 

இதுகுறித்து ஹரிஷ் ராவத், 'நான் ஒரு விவசாயியின் மகன், விவசாயிகளின் பிரச்னைகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்களின் போராட்டத்துக்கு என் முழு ஆதரவைத் தெரிவிக்கிறேன். மூன்று விவசாய விரோதச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறேன்' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.