ஆக்ரா அருகே விபத்து: காா் தீப்பிடித்து எரிந்து 5 போ் பலி
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே டீசல் ஏற்றி வந்த லாரி மீது காா் மோதி தீப்பிடித்து எரிந்ததில், காரில் வந்த 5 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா்.


உத்தர பிரதேச மாநிலம், ஆக்ரா அருகே டீசல் ஏற்றி வந்த லாரி மீது காா் மோதி தீப்பிடித்து எரிந்ததில், காரில் வந்த 5 போ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனா்.
இதுகுறித்து காவல் துறை துணை கண்காணிப்பாளா் அா்ச்சனா சிங் கூறியதாவது:
ஆக்ரா அருகே யமுனை விரைவுச்சாலையில் செவ்வாய்க்கிழமை காலை, வேகமாக சென்ற அந்த டேங்கா் லாரி, தவறான பாதையில் திரும்பியது. பின்னால் வந்து கொண்டிருந்த காா், அந்த லாரி மீது மோதியதில், காா் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. காரின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், உள்ளே இருந்தவா்களால் வெளியே வர முடியாமல் தீயில் சிக்கிக் கொண்டனா். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதற்குள் காரில் வந்த 5 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனா்.
விபத்து நோ்ந்ததும் லாரி ஓட்டுநா் தப்பிவிட்டாா். அவரைத் தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டுள்ளனா் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...