"27 லட்சம் கரோனா தடுப்பூசிகளை சேமிக்கும் குளிர்பதன கிடங்கு தயார்'

தில்லி விமான நிலையத்தில் 27 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்து குப்பிகளைச் சேமித்து வைக்கும் அளவுக்கு குளிர்பதன கிடங்கு தயாராக இருப்பதாக தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் தலைமை அதிகாரி
 "27 லட்சம் கரோனா தடுப்பூசிகளை சேமிக்கும் குளிர்பதன கிடங்கு தயார்'
Updated on
1 min read

தில்லி விமான நிலையத்தில் 27 லட்சம் கரோனா தடுப்பூசி மருந்து குப்பிகளைச் சேமித்து வைக்கும் அளவுக்கு குளிர்பதன கிடங்கு தயாராக இருப்பதாக தில்லி இந்திரா காந்தி விமான நிலையத்தின் தலைமை அதிகாரி விதேகுமார் ஜெய்புரியார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
 மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம், பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஃபைசர் ஆகிய மூன்று நிறுவனங்கள் தங்களது தடுப்பூசிகளுக்கு அவசர ஒப்புதல் கோரியது. அவை கரோனா நிபுணர் குழுவால் பரிசோதிக்கப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 இதையொட்டி, கரோனா நோய் தடுப்பூசி மருந்து விநியோகம் அடுத்தமாதம் தொடங்கவுள்ளது. இதனால் இந்த தடுப்பூசி மருந்துக் குப்பிகள் தில்லி விமான நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு கொண்டுபோகும் வகையில், தில்லி விமான நிலையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 விமான நிலைய தடுப்பூசி விநியோகத் திட்டத்திற்கு "சஞ்சீவனி" என பெயரிட்டு இந்த பணிகளை மேற்கொள்கின்றோம். தில்லி விமான நிலையத்தில் எந்த நேரத்திலும் சுமார் 2.7 மில்லியன் தடுப்பூசி குப்பிகளை வைக்கும் திறன் உள்ள குளிர்சாதன கிடங்கு எங்களிடம் தயாராக உள்ளது. ஒரே நாளில் இரண்டு சுற்று விநியோகங்கள் நடந்தால், தினமும் 5.4 மில்லியன் குப்பிகளை இங்கிருந்து விநியோகிக்க முடியும்.
 ஃபைசர் தடுப்பூசியை மைனஸ் 70 டிகிரி செல்சியஸில் வைக்க வேண்டும். ஆனால் தில்லி விமான நிலையத்தில் அந்தளவிற்கு குளிர்சாதன சேமிப்பு வசதி இல்லை. இருப்பினும், ஃபைசர் இணையதளத்தில் தடுப்பூசியை 30 நாட்களுக்கு உலர்ந்த பனிக்கட்டியிலும் மேலும் ஐந்து நாட்களுக்கு 2 முதல் 8 டிகிரி வரை சேமிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, மொத்தம் 35 நாட்கள் இங்கு வைக்கப்பட்டு விநியோகிக்க முடியும். இதற்கு நாங்கள் முற்றிலும் தயாராக இருக்கிறோம்.
 சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, பாரத் பயோடெக் ஆகியவற்றின் தடுப்பூசிகளை வழக்கமான குளிர்சாதன பெட்டியில் வைக்க முடியும்.
 தில்லி விமான நிலையத்தில் இரண்டு சரக்கு முனையங்கள் உள்ளன. இவற்றில் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை குளிர்நிலையை பராமரிக்கலாம்.
 "இந்த தடுப்பூசிகள் குளிர்ச்சியாக வைத்திருக்கும் 'என்விரோடெய்னரில்' கொண்டுவரப்படலாம் வரலாம். அவைகள் வைக்கப்படும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.
 தடுப்பூசிகளை எடுத்துச் செல்லக்கூடிய கன்டெய்னர் லாரிகளுக்கு நாங்கள் ஒரு தனி நுழைவாயிலை உருவாக்கியுள்ளோம். இதற்காக தனி மேலாண்மை அமைப்பு உள்ளது என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com