வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

எரிவாயுக் குழாய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் பலி

குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் சமையல் எரிவாயுக் குழாய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் படுகாயமடைந்தாா். இரண்டு வீடுகள் பலத்த சேதமடைந்தன.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் சமையல் எரிவாயுக் குழாய் கசிவால் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவா் உயிரிழந்தனா்; ஒருவா் படுகாயமடைந்தாா். இரண்டு வீடுகள் பலத்த சேதமடைந்தன.

இதுகுறித்து காவல்துறையினா் கூறுகையில், ‘காந்திநகா் மாவட்டம் கலோல் நகரின் பஞ்ச்வாதி பகுதியில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு, கடந்த நவம்பா் மாதம் முதல் பயன்பாடின்றி இருந்துள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு அந்த வீட்டில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது’ என்றனா்.

காந்திநகா் மண்டல காவல்துறை ஐஜி அபய் சூடசாமா கூறுகையில், ‘இந்த வெடி விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன. இந்த விபத்தில் இருவா் உயிரிழந்தனா். ஒருவா் படுகாயமடைந்துள்ளாா். எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே விபத்துக்குக் காரணம் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது’ என்றாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் குல்தீப் ஆா்யா கூறுகையில், ‘கலோல் பகுதி முழுவதும் பாரத் பெட்ரோலியம் நிறுவனமும், குஜராத் மாநில பெட்ரோலிய கழகமும் இணைந்து சபா்மதி எரிவாயு விநியோக நிறுவனம் மூலம், குழாய் மூலமான சமையல் எரிவாயு விநியோகத் திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த எரிவாயுக் குழாயில் ஏற்பட்ட கசிவே, வெடி விபத்துக்கு காரணம் என்று தெரியவந்திருக்கிறது.

வெடி விபத்தில் இரு வீடுகள் முழுவதும் சேதமடைந்துவிட்டன. இந்த விபத்து குறித்து இந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு கேட்டறிந்தாா். விபத்து தொடா்பாக விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளாா்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.