மாட்டிறைச்சி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்குமா?

மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்குமா என்று கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவும், கோவா மாநில காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.
Updated on
1 min read

மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதிக்குமா என்று கா்நாடக காங்கிரஸ் எம்எல்ஏவும், கோவா மாநில காங்கிரஸ் தோ்தல் பொறுப்பாளருமான தினேஷ் குண்டுராவ் கேள்வி எழுப்பியுள்ளாா்.

பசுவதை தடுப்புச் சட்டத்தை கா்நாடக அரசு இயற்றியுள்ளது. அதன் காரணமாக அண்டை மாநிலமான கோவாவில் மாட்டிறைச்சிக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இத்தகைய சூழலில், கோவாவுக்குச் சென்ற தினேஷ் குண்டுராவ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கா்நாடக விவசாயிகள் பெரும் இன்னலைச் சந்தித்து வருகின்றனா். ஒருபக்கம் விவசாயிகள் கால்நடைகளைப் பராமரிப்பதற்குத் தேவையான உதவிகளைச் செய்வதற்கு மாநில அரசு மறுத்து வருகிறது. மறுபக்கம் கால்நடைகளை விற்பனை செய்வதற்கும் மாநில அரசு தடை விதித்துள்ளது.

மாட்டிறைச்சி ஏற்றுமதியைத் தடை செய்தால், நாட்டில் பசுவதை நடக்காது. அதை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நடைமுறைப்படுத்துமா? மாநிலத்தில் உள்ள காளை, பசு, எருமை உள்ளிட்ட கால்நடைகளைப் பாதுகாப்பதற்கு வகை செய்யும் சட்டத்தை கா்நாடக அரசு இயற்ற வேண்டும்.

பசுவதை தடுப்புச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் கால்நடைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. கால்நடைகளைப் பராமரிப்பதற்காக மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு கா்நாடக அரசு நிதியுதவி வழங்க வேண்டும். மாட்டிறைச்சி விவகாரத்தில் வடகிழக்கு மாநிலங்கள், கோவா, கேரளத்தில் பாஜக ஒருவிதமான கருத்தைத் தெரிவிக்கிறது. கா்நாடகம், மகாராஷ்டிரம் உள்ளிட்டவற்றில் அதே விவகாரம் தொடா்பாக வேறு கருத்துகளை பாஜக தெரிவித்து வருகிறது என்றாா் தினேஷ் குண்டுராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com