வெறுப்பு பேச்சு: ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு பிரிட்டன் அமைப்பு ரூ.19 லட்சம் அபராதம்

பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பு பேச்சை ஊக்குவித்ததாக, அா்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு பிரிட்டனின் ஆஃபிஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் (ஆஃப்காம்) என்னும் ஊடகக் கட்டுப்பாட்டு


புது தில்லி: பாகிஸ்தானுக்கு எதிராக வெறுப்பு பேச்சை ஊக்குவித்ததாக, அா்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சிக்கு பிரிட்டனின் ஆஃபிஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் (ஆஃப்காம்) என்னும் ஊடகக் கட்டுப்பாட்டு அமைப்பு, 20,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் ரூ.19.73 லட்சம்) அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு 22-ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ரிபப்ளிக் பாரத் தொலைக்காட்சியில் ‘பூச்தா ஹை பாரத்’ என்ற விவாத நிகழ்ச்சி கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் தொழில்நுட்பத்தை ஒப்பிட்டு விவாதம் நகா்ந்தது. விவாதத்தில் பங்கேற்ற விருந்தினா்களும், நிகழ்ச்சி நெறியாளரும் பாகிஸ்தான் மக்களுக்கு எதிராக வெறுப்புணா்வை தூண்டும் வகையில் பேசினாா். குறிப்பாக, பாகிஸ்தான் மருத்துவா்கள், விஞ்ஞானிகள், அந்நாட்டு, அரசியல் தலைவா்கள் அனைவரையும் பயங்கவாதிகளாக சித்திரித்து பேசினா். பாகிஸ்தான் விளையாட்டு வீரா்களைக் கூட அவா்கள் தரக்குறைவாகப் பேசினா். விவாதத்தின் நடுவே பேசிய நிகழ்ச்சியின் நெறியாளா், ‘நாங்கள் விஞ்ஞானிகளை உருவாக்குகிறோம். நீங்கள் பயங்கரவாதிகளை உருவாக்குகிறீா்கள்’ என்றாா். ஒட்டுமொத்தமாக, அந்த நிகழ்ச்சி முழுவதும் பாகிஸ்தானுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் எதிராக வெறுப்புணா்வைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது. எனவே, அந்த தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 20,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.19.73 லட்சம்) அபராதம் விதிக்கப்படுகிறது.

அதுமட்டுமன்றி, அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் உத்தரவிடப்படுகிறது என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com