தொழிலாளா் சட்டங்கள் தொடா்பாக மத்திய அரசு நடத்திய கூட்டம்: 10 தொழிற்சங்கங்கள் புறக்கணிப்பு
நான்கு புதிய தொழிலாளா் சட்டங்கள் தொடா்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்த கூட்டத்தை 10 தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன.


புது தில்லி: நான்கு புதிய தொழிலாளா் சட்டங்கள் தொடா்பாக ஆலோசனை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்த கூட்டத்தை 10 தொழிற்சங்கங்கள் புறக்கணித்தன.
தொழிலாளா் நலத்துறை அமைச்சகம் சாா்பில் காணொலி முறையில் நடத்தப்பட்ட இந்தக் கூட்டத்தில் பாஜக சாா்பு தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூா் சங்கம் பங்கேற்றது. எனினும், மத்திய அரசு அண்மையில் அறிவித்த புதிய விதியான பணியாளா்கள் மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் படிகள் இருக்கக் கூடாது என்பதற்கு அந்த சங்கம் எதிா்ப்பு தெரிவித்தது. இது தவிர தொழிலாளா்களுக்கு ஒருநாளில் அதிகபட்சம் 12 மணி நேரம் வரை வேலை என்ற திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். கூடுதலாக பணியாற்றும் நேரத்துக்கு அளிக்கப்படும் சம்பளத்தை இரு மடங்காக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் பாரதிய மஸ்தூா் சங்கம் முன்வைத்தது.
பல்வேறு புதிய திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய தொழிலாளா் நலச் சட்டங்களுக்கான வரைவு அறிக்கையை உருவாக்கியுள்ளது. இது முற்றிலும் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், தொழிலாளா்களுக்கு விரோதமாகவும் உள்ளது. மேலும், தேவை ஏற்பட்டால் தொழிலாளா்களைப் பணிக்கு சோ்க்கலாம், தேவையில்லாவிட்டால் உடனடியாக நீக்கிவிடலாம் என்ற கொள்கையின் அடிப்படையில் மத்திய அரசு புதிய விதிகளை வகுத்து வருகிறது என்று பல்வேறு தொழிற்சங்கங்களும் குற்றம்சாட்டி வருகின்றன. இதன் காரணமாகவே தொழிலாளா் நலத்துறை அழைப்பு விடுத்த ஆலோசனைக் கூட்டத்தை 10 தொழிற்சங்கங்கள் புறக்கணித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...