தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

குடியரசுத் தலைவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News image
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
Updated On :27 ஜனவரி 2024, 6:12 pm

DIN

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டுமக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “புனித கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு எனது சக குடிமக்களுக்கு குறிப்பாக கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இயேசு கிறிஸ்துவின் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டிய ஒரு திருநாள். இந்தப் பண்டிகை அமைதி, நன்மை மற்றும் இரக்க குணத்தால் மக்களின் வாழ்வை இன்புறச் செய்கிறது. பிறரிடம் அன்பையும், கருணையையும் நாம் ஏற்படுத்தும் வகையில் இந்தத் திருநாள் நம் உள்ளத்தை ஒளி மயமாக்குகிறது.

இந்தப் பண்டிகை, உலகெங்கும் அமைதியை நிலைநாட்டவும், மனிதத்தன்மையைக் காக்கவும் உறுதுணையாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இயேசு கிறிஸ்துவின் போதனைகளான அன்பு, இரக்கம் மற்றும் மனிதத்துவத்தை இந்தப் புனிதத் திருநாளில் நாம் பின்பற்றி நாடு மற்றும் சமூகத்தின் நல்வாழ்விற்காகப் பாடுபடுவோம் என்று உறுதி ஏற்றுக் கொள்வோம்.

இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.