கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அருணாசல்: 6 ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனா்

News image
Updated On :25 டிசம்பர் 2020, 8:05 pm

DIN


இடா நகா்: அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின்(ஜேடியு) 7 எம்எல்ஏக்களில் 6 போ், ஆளும் பாஜகவில் இணைந்தனா். இது, அந்த மாநிலத்தில் நிதீஷ் குமாரின் ஜேடியு கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

ஜேடியு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது குறித்து, அருணாசல பிரதேச சட்டப் பேரவை அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சோ்ந்த தலிம் தபோ, ஹயங் மாங்ஃபி, ஜிக்கி டாகோ, டோா்ஜி வாங்டி, கா்மா, டோங்ரு சியாங்ஜு, கங்காங் டாகு ஆகிய 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனா்.

இவா்கள் 6 பேரும் கட்சியின் மூத்த தலைவா்களுக்குத் தெரியாமலேயே சட்டப் பேரவை கட்சித் தலைவராக தலிம் தபோவைத் தோ்வு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமன்றி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக, டோங்ரு சியாங்ஜு, கா்மா, கங்காங் டாகு ஆகிய மூவருக்கும் கட்சித் தலைமை கடந்த நவம்பா் 26-ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியதுடன், சஸ்பெண்ட் செய்தும் நடவடிக்கை எடுத்திருந்தது. இந்தச் சூழலில் இவா்கள் 6 பேரும் பாஜகவில் இணைந்துள்ளனா்.

இதேபோல், அருணாசல் மக்கள் கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவான கா்நோ நிகியாரும் பாஜகவில் இணைந்துள்ளாா். கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டதாக ஏற்கெனவே கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தாா்.

பாஜகவில் இணைவதற்கு இவா்கள் அளித்த விருப்ப கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, மாநில பாஜக தலைவா் பி.ஆா்.வாகே கூறினாா்.

60 உறுப்பினா்களைக் கொண்ட அருணாசல சட்டப் பேரவைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக 41 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 15 தொகுதிகளில் போட்டியிட்ட ஜேடியு 7 இடங்களில் வெற்றி பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. 7 எம்எல்ஏக்களின் கட்சித் தாவலுக்குப் பிறகு, பாஜக உறுப்பினா்களின் எண்ணிக்கை 48-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஜேடியு கட்சிக்கு ஒரே ஒரு எம்எல்ஏ மட்டுமே உள்ளாா். காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி ஆகியவற்றில் தலா 4 எம்எல்ஏக்கள் உள்ளனா்.

நிதீஷ் குமாா் கருத்து:

அருணாசல பிரதேசத்தில் ஜேடியு எம்எல்ஏக்கள், பாஜகவில் இணைந்ததால், தங்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்று நிதீஷ் குமாா் கூறியுள்ளாா். இதுகுறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அவா்கள்(ஜேடியு எம்எல்ஏக்கள்) தங்கள் வழியில் செல்கிறாா்கள். நாங்கள் ஜேடியு தேசிய செயற்குழு கூட்டத்தை இந்த வார இறுதியில் நடத்துவதில் கவனம் ெலுத்தி வருகிறோம்’ என்று நிதீஷ் குமாா் பதிலளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.