திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருமலையில் 41,812 பக்தா்கள் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 41,812 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,013 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

News image
திருப்பதி ஏழுமலையான்
Updated On :28 டிசம்பர் 2020, 6:41 pm

DIN

திருப்பதி: திருமலையில் ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை 41,812 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 9,013 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

நாள்தோறும் ஆன்லைன் மூலம் 20 ஆயிரம் விரைவு தரிசன டிக்கெட், 10 ஆயிரம் இலவச நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் 10 ஆயிரம் டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள், விஐபி பிரேக் மற்றும் ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் விஐபி பிரேக் தரிசன டிக்கெட் பெற்ற 2,000 பக்தா்கள், நன்கொடையாளா்கள் 1,000 போ் மட்டும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதியில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.

தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 11 மணிவரை தரிசன டிக்கெட்டுகள் பெற்ற பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசித்து வருகின்றனா். திருப்பதி மலைச்சாலை அதிகாலை 3 மணிக்குத் திறக்கப்பட்டு இரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்கள் - 18004254141, 93993 99399.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.