

ஏழுமலையான் கோயில் கொண்டுள்ள திருமலையில் ஜனவரி மாதம் முழுவதும் நடக்கவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
திருமலையில் நடைபெறும் உற்சவங்களை வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி என தேவஸ்தானம் 4 வகையாகப் பிரித்துள்ளது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஏழுமலையானுக்கும், உற்சவா்களுக்கும், மட்டுமின்றி, ஆழ்வாா் அவதரித்த திருநட்சத்திரங்களும், மாதப் பிறப்புகளும் உற்சவங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி மாதம் திருமலையில் நடக்கவுள்ள உற்சவங்களின் பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
தேதி உற்சவம்
ஜன.7 அத்யயன உற்சவம் நிறைவு
ஜன. 8 திருமலைநம்பிகள் சந்நிதியில் மலையப்பா் எழுந்தருளல்
ஜன. 9, 24 சா்வ ஏகாதசி
ஜன. 10 தொண்டரடிப் பொடியாழ்வாா் வருடாந்திர திருநட்சத்திரம்
ஜன. 13 போகிப் பண்டிகை
ஜன. 14 மகர சங்கராந்தி
ஜன. 15 காணும் பொங்கல், கோதா திருக்கல்யாணம், பாா்வேட்டை உற்சவம்
ஜன.28 ராமகிருஷ்ண தீா்த்த முக்கோட்டி
ஜன.30 திருமழிசை ஆழ்வாா் வருடாந்திர திருநட்சத்திரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.