நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென்னாப்பிரிக்க அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி பே ஓவலில் இன்று (மார்ச் 15) நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
91 ரன்களுக்கு ஆட்டமிழப்பு!
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 14.3 ஓவர்களில் 91 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ஜேம்ஸ் நீஷம் 26 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் மற்றும் கோல் மெக்கோன்ஹி தலா 15 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை.
தென்னாப்பிரிக்கா தரப்பில் மோகோனா 3 விக்கெட்டுகளையும், கேப்டன் கேசவ் மகாராஜ், ஓட்நீல் பார்ட்மேன் மற்றும் ஜெரால்டு கோட்ஸீ தலா இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தென்னாப்பிரிக்கா அபார வெற்றி!
92 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 16.4 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் கொன்னோர் எஸ்டர்ஹியூசன் அதிகபட்சமாக 48 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். அதில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டியான் ஃபாரஸ்டர் 16 ரன்களும், ஜேசன் ஸ்மித் 10 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், ஸகாரி ஃபோல்க்ஸ் மற்றும் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
South Africa won the first T20I against New Zealand by 7 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அறிமுக டி20 தொடரிலேயே தொடர் நாயகன் விருது வென்ற கானர் எஸ்டர்ஹுய்சன்!

டி20 உலகக் கோப்பை தோல்விக்கு நியூசிலாந்தை டி20 தொடரில் பழிவாங்கிய தென்னாப்பிரிக்கா!

3-வது டி20: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தென்னாப்பிரிக்கா மோசமான பேட்டிங்: 68 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து!
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


