தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான மூன்றாவது டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று (மார்ச் 20) நடைபெற்றது.
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக மோகோனா 20 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். அதில் ஒரு பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜார்ஜ் லிண்டே 23 ரன்களும், ஜெரால்டு கோட்ஸீ 16 ரன்களும் எடுத்தனர்.
நியூசிலாந்து தரப்பில் கைல் ஜேமிசன், மிட்செல் சாண்ட்னர் மற்றும் பென் சியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லாக்கி பெர்குசன், கோல் மெக்கோன்ஹி மற்றும் ஜேம்ஸ் நீஷம் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
நியூசிலாந்து அபார வெற்றி!
137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 16.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான டெவான் கான்வே மற்றும் டாம் லாதம் முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்தனர். டெவான் கான்வே 26 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டாம் லாதம் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 55 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். டிம் ராபின்சன் 17 ரன்கள் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா தரப்பில் லூதோ சிபாம்லா மற்றும் கேசவ் மகாராஜ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய லாக்கி பெர்குசனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 4 ஓவர்களை வீசிய அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
Summary
New Zealand won the third T20I against South Africa by 8 wickets.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிளன் பிலிப்ஸ் சதம் விளாசல்; முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் குவித்த நியூசிலாந்து!

டி20 உலகக் கோப்பை: இலங்கைக்கு 151 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து!

ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!







