ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

மனைவி, மகன் மற்றும் மகளை சுத்தியலால் கொன்ற காவலர்

சதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஞ்சியில் உள்ள பேட்காயில் ஒரு போலீஸ்காரர் செய்த மூன்று கொலை

News image

கோப்புப் படம்

Updated On :1 பிப்ரவரி 2020, 8:01 am

சாதர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஞ்சியிலுள்ள பேட்காயில் காவலர் ஒருவர் செய்த மூன்று கொலைகள், அந்நகரம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை எழுப்பியுள்ளது.

பிரஜேஷ் திவாரி என்பவர் தனது மனைவி, பதின்வயது மகள் மற்றும் மகனை சுத்தி மற்றும் கத்தியைப் பயன்படுத்திக் கொன்றுள்ளார், பின்னர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

தற்போது அவர் உயிருக்கு போராடும் நிலையில் ரிம்ஸின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பலாமு மாவட்டத்தைச் சேர்ந்த பிரஜேஷ் திவாரி சிறப்புக் கிளையின் டி.எஸ்.பி.யின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இறந்தவர்கள் அவரது மனைவி ரிங்கி தேவி (35), மகள் குஷ்பு (15) மற்றும் மகன் பாதல் (10) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சிறுமியும் சிறுவனும் பாரியாட்டில் உள்ள செவன்த் டே எனும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் குடும்பம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சித்ரகுப்த நகரில் பால்டியோ சாஹு என்பவருக்குச் சொந்தமான வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.