ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

எங்களுக்கு எதிரான மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்: தில்லி தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும் அதனை ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

News image
Updated On :11 பிப்ரவரி 2020, 8:07 am

PTI


புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு எங்களுக்கு எதிராக இருந்தாலும் அதனை ஏற்கிறோம் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி பாஜக 13 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

பதிவான வாக்குகளில் ஆம் ஆத்மி கட்சி 53.50% வாக்குகளைப் பெற்றுள்ளது. பாஜக 38.79% வாக்குகள் பெற்றுள்ளன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் வெறும் 4.2% வாக்குகளை மட்டுமே பிடித்துள்ளது.

இந்த நிலையில், தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கூறப்பட்டிருப்பதாவது, மக்களின் முடிவு எங்களுக்கு எதிராகவே உள்ளது. எனினும் அதனை நாங்கள் ஏற்கிறோம். கட்சியின் மீண்டும் கட்டமைப்போம், பலத்தை மீட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.