ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

மாநிலங்களவை உறுப்பினராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், தனது வாதத்தைக் கேட்காமல் அதன் மீது உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று

News image

கோப்புப்படம்

Updated On :12 பிப்ரவரி 2020, 9:22 am


புது தில்லி: மாநிலங்களவை உறுப்பினராகத் தான் தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டால், தனது வாதத்தைக் கேட்காமல் அதன் மீது உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டால், அதன் மீது தனது வாதத்தையோ அல்லது கருத்தையோ கேட்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று கேவியட் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவை உறுப்பினராக ஜெய்சங்கர் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் கௌரவ் பாண்டியா தாக்கல் செய்த மனு, பிப்ரவரி 4ம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.