தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள்: நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட நிர்பயாவின் தாய்
நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.


புது தில்லி: நிர்பயா வழக்கில் நான்கு குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நீதிமன்றத்தில் கண்ணீர்விட்டு அழுதார் நிர்பயாவின் தாய் ஆஷா தேவி.
நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை அறிவிக்குமாறு விசாரணை நீதிமன்றத்தில் மத்திய மற்றும் தில்லி அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பவன் குப்தா சார்பில், தனக்காக சட்ட நிவாரணம் பெற்றுத் தர வழக்குரைஞர் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறப்பட்டதை அடுத்து, அவருக்கு சட்ட உதவி வழங்க தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், 7 ஆண்டுகளாகபோராடிக் கொண்டிருக்கிறேன். 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடும் தேதியை அறிவியுங்கள் என்று கூறி நிர்பயாவின் தாய் ஆஷா தேவி நீதிமன்றத்தில் கதறி அழுதார்.
இதையடுத்து, குற்றவாளிகளை தூக்கிலிடும் தேதியை நிர்ணயிக்கக் கோரிய மனு மீதான விசாரணையை நீதிமன்றம் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...