படுஜோரான வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஆம் ஆத்மிக்கு அடுத்த சவால் என்ன?

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். 
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவிக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால்.
தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கூடியிருந்த தொண்டர்களுக்கு உற்சாகமாக வாழ்த்து தெரிவிக்கும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் கேஜரிவால்.
Updated on
1 min read

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்துள்ளார் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால். 

ஏற்கனவே ஆம் ஆத்மி செய்து வரும் நலத்திட்டங்கள் மற்றும் சில இலவச அறிவிப்புகள் மட்டுமல்லாமல், தேர்தல் வாக்குறுதிகளும் கூட இந்த வெற்றிக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.

அவ்வாறு அரவிந்த் கேஜரிவால் வைத்த வாக்குறுதிகளை நம்பியே, தில்லி மக்கள் வாக்களித்திருந்தால், அவர்களது நம்பிக்கையை காப்பாற்றுவது என்பது ஆம் ஆத்மிக்கு அவ்வளவு எளிதான காரியமாக இருந்து விடாது.

அதாவது, தில்லியில் காற்று மாசு மற்றும் மலைபோல் குவிந்திருக்கும் குப்பைகளை அகற்றுவது, 24 மணி நேரமும் மின்சாரம், குழாயில் சுத்தமான குடிநீர், தரமான சாலைகள், வாகன நெரிசலற்ற போக்குவரத்து, யமுனையை சுத்தப்படுத்தி சுற்றுலாத் தலமாக்குவது என்பன ஆம் ஆத்மி வைத்த சில முக்கிய வாக்குறுதிகள்.

பாஜகவின் கீழ் இருக்கும் மாநகராட்சியே தில்லியில் குப்பைகளை அகற்றுதல், நகரை சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், தில்லியில் பாஜக ஆட்சியில் இல்லை. எனவே, மாநகராட்சியின் முழு ஆதரவோடு, தில்லியில் தூய்மைப் பணிகளை ஆம் ஆத்மி மேற்கொள்வது சற்று அல்லது சற்று கூடுதலான சிரமத்துக்குரிய பணியாகும்.

அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் சுத்தமான தண்ணீர் வழங்கப்பட வேண்டும். இதுவும் ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய சவாலே. ஏற்கனவே, தில்லியில் குடிமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிக மோசமான தரத்தில் இருப்பதாக மத்திய அரசு அறிக்கை வெளியிட்டிருந்ததும் நினைவிருக்கலாம்.

அடுத்த வாக்குறுதி யமுனை நதியை சுத்தப்படுத்தி, கரைகளை அழகாக்கி சுற்றுலாத் தலமாக்குவது என்பது. ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால், யமுனை பாயும் மேல் பகுதி மாநிலம் இதற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஆனால், அந்த மாநிலம் பாஜக ஆளும் மாநிலமாக உள்ளது. அதன் ஒத்துழைப்புக் கிடைத்தால் ஒழிய, யமுனையை சுத்தப்படுத்துவது என்பது கேஜரிவால் அரசால் இயலாத காரியமாகிவிடும்.

உலகில் இருக்கும் பல நகரங்களைப் போலவே தில்லியையும் 24X7 போல ஆக்க வேண்டும் என்பது ஆம் ஆத்மியின் கனவு. ஆனால் அதனை செயல்படுத்த வேண்டும் என்றால் ஏராளமான திட்டப் பணிகளும், முதலீடுகளும் தேவைப்படும். அதற்கும் மத்திய அரசின் முழு ஆதரவு தேவைப்படும். 

இதுபோன்ற பல தடைகளையும் தாண்டித்தான், ஆம் ஆத்மி அளித்த பல வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி உள்ளது. இந்தத் தடைகளை எல்லாம் ஆம் ஆத்மி தாண்டப் போகிறதா? அல்லது தடைகளை உடைத்து சாதனைப் படைக்கப் போகிறதா என்று அதன் எதிரிகளும், நண்பர்களும் உற்று நோக்கத் தயாராகி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com