அரசு மற்றும் தனியார் துறை பணிகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு கேட்டு கன்னட அமைப்புகளின் அழைப்பின் பேரில் கர்நாடகாவில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கர்நாடகாவில் அரசு மற்றும் தனியார் துறைகளில் கன்னடர்களுக்கு குறிப்பிட்ட சதவிகித இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
எனினும், பள்ளிகள், அலுவலகங்கள் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்து மற்றும் ரயில் சேவைகளும் வழக்கம் போல இயங்கின.
கன்னட சங்கங்கள் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்தையொட்டி, பெங்களூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநகரக் காவல் ஆணையா் பாஸ்கர்ராவ் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கா்நாடகத்தில் உள்ள தனியாா் நிறுவனங்களில் கன்னடா்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி கன்னட சங்கங்களின் கூட்டமைப்பு வியாழக்கிழமை (பிப். 13) முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. பெங்களூரில் முழு அடைப்புக்கு எந்த அனுமதியும் பெறவில்லை. அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டால் எந்த பிரச்னையும் இல்லை.
கடை, ஹோட்டல் உள்ளிட்ட தொழில்நிறுவனங்களை மூட முயன்றால் அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையத்திலிருந்து சுதந்திரப் பூங்கா வரை பேரணியில் ஈடுபடுவதாக போராட்டக் குழுவினா் தெரிவித்துள்ளனா். பேரணியின் போது பொது சொத்துக்களுக்கு சேதமோ, அசம்பாவிங்களோ நடைபெற்றால் அதற்கு போராட்டக் குழுவினரே பொறுப்பேற்க வேண்டும்.
பெங்களூரில் முக்கியச்சாலைகளில் போராட்டத்தில் ஈடுபடவோ அல்லது ஊா்வலம் செல்லவோ அனுமதி வழங்கப்படவில்லை. அரசு, மாநகரப் பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று துணை முதல்வா் லட்சுமண்சவதி அறிவித்துள்ளதால், பேருந்து போக்குவரத்துக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.
முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால், பெங்களூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிறுமி ஓட்டிச் சென்ற காா் மோதியதில் மொபெட் ஓட்டிச் சென்ற சிறுமி உயிரிழப்பு

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

‘டெக்’ துணுக்குகள்..

சென்னை: 16 தொகுதிகளில் 24.21 லட்சம் போ் வாக்களிப்பு
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


