காஷ்மீர் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல்: ஒருவர் பலி
ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.


ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், இன்று காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் பகுதியில் பயங்கரவாதிகள் உள்நுழைந்து பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதன் தொடர்ச்சியாக இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இதில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார்.
தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கவாதிகளைத் தேடும் பணியில் பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சண்டையில் பயங்கரவாதிகள் விட்டுச்சென்ற துப்பாக்கிகள், வெடி மருந்துகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...