ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதுடன், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழிவகை செய்யும் மசோதாக்கள் மத்திய அரசால் நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்டன.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையின்போது, காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோர் வீட்டுக்காவலில் சிறைவைக்கப்பட்டனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. வீட்டுக்காவலில் வைக்கப்பட்ட தலைவர்களை விடுவிக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் தடுப்பு காவல் நீட்டிப்பு குறித்து ஜம்மு-காஷ்மீர் அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உமர் அப்துல்லாவை பொது பாதுகாப்புச் சட்டத்தின் (பிஎஸ்ஏ) கீழ் தடுத்து வைத்திருப்பதற்கு எதிராக அவரின் சகோதரி தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு பின்னர், ஒமர் அப்துல்லாவை கைது செய்தது குறித்து ஜம்மு காஷ்மீர் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை மார்ச் 2ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்

திருப்பரங்குன்றத்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு திமுக, பாஜகதான் காரணம்: சிடிஆர். நிர்மல் குமார்
மமதாவின் ஹெலிகாப்டர் அருகில் பறந்த மர்ம ட்ரோனால் பரபரப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


