ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

சீனாவில் இருந்து வந்த 406 இந்தியர்கள் எப்போது வீடு திரும்புவார்கள்?

சீனாவின் வூஹான் நகரில் இருந்து தில்லி வந்த 406 பேருக்கும், அடுத்த வாரம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :15 பிப்ரவரி 2020, 12:14 pm

PTI


புது தில்லி: சீனாவின் வூஹான் நகரில் இருந்து தில்லி வந்த 406 பேருக்கும், அடுத்த வாரம் நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்கள் வீடு திரும்பலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 1 மற்றும் 2ம் தேதிகளில் வூஹான் நகரில் இருந்து சிறப்பு விமானம் மூலம் தில்லி வந்த 406 பேரும், அங்குள்ள இந்திய-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினரின் (ஐடிபிபி) சிறப்பு மருத்துவ முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவா்களுக்கு முதல்கட்டமாக நடத்தப்பட்ட சோதனையில் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டது. எனினும், அடுத்த வாரம் மீண்டும் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு அதிலும் கரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால், அவர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Story image

சீனாவின் வூஹான் நகரில் இருந்து இரு விமானங்களில் அழைத்து வரப்பட்டவா்களில் தில்லியில் உள்ள ஐடிபிபி முகாமில் 406 போ் தங்கவைக்கப்பட்டனா். அவா்களில் 3 சிறாா்கள் உள்ளிட்ட 302 ஆண்களும், ஒரு குழந்தையுடன் 100 பெண்களும் உள்ளனா். 

ஐடிபிபி முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தவா்களுக்கு முறைப்படி தொடா் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் சஃப்தா்ஜங் மருத்துவமனைகளில் இருந்து வந்த மருத்துவா்கள், முகாம்களில் உள்ள மருத்துவக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கினா். மருத்துவப் பரிசோதனையின் முடிவில், முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 406 பேருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.