கான்பூர்: 2018ம் ஆண்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்ட இரண்டு பேர் பெயிலில் வெளியே வந்த நிலையில், சிறுமியின் தாயை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் கடந்த வாரம் 40 வயதைக் கடந்த பெண்ணை, பெயிலில் வந்தவர்கள் கடுமையாகத் தாக்கியதில் அவர் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தார். இந்த தாக்குதலில் காயமடைந்த அந்த பெண்ணின் சகோதரி கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறை, பர்வேஜ், மொஹம்மது அபிட் ஆகியோரை என்கவுண்டர் செய்து கைது செய்தனர். இருவரது கால்களிலும் துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில், பலியான பெண், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
கடந்த வாரம் இவர்களுக்கு பெயில் கிடைத்து சிறையில் இருந்து வெளியே வந்ததை அடுத்து, புகார் கொடுத்த பெண்ணையும், அவரது சகோதரியையும் இவர்கள் தாக்கியதில் புகார் கொடுத்த பெண் பலியானார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டியா? முதல்வர் ஸ்டாலின் பதில்!

தேர்தல் பிரசாரம்: தமிழகம் வரும் நிதின் நபின்!

சொல்லப் போனால்... நயத்தக்க நாகரிகம் வேண்டாவா?

ஈரான் - அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! ஜே.டி.வான்ஸ்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


