ஈரான் - அமெரிக்கா இடையே 14 மணிநேரம் நீடித்த பேச்சுவார்த்தை நிறைவு! மு.க. ஸ்டாலின் ஐந்தாம் கட்ட பிரசாரம் திருவள்ளூரில் நாளை தொடக்கம்சட்டக் கட்டமைப்புகள் முழுவதிலும் சீா்திருத்தம்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தல் இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!எனது வேட்பு மனுவை செல்லாததாக்க பாஜக முயன்றது: மம்தா
/

பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாகக் கிடந்த பை: பீதியடைந்த மக்கள்

செவ்வாய்க்கிழமை காலை யாத்கீர் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கிடமாக பை ஒன்று தனியாக இருந்தது.

News image
Updated On :21 ஜனவரி 2020, 10:10 am

செவ்வாய்க்கிழமை காலை கர்னாடகத்திலுள்ள யாத்கீர் பஸ் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக பை ஒன்று தனியாக இருந்தது. இது பயணிகளை பீதியில் ஆழ்த்தியது. கைவிடப்பட்டப் பையில் என்ன இருக்கும் என்றும் அது யாருடையது என்றும் தெரியாத நிலையில் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நிலவியது, 

Story image

காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதும், மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு போலீஸார் விரைந்து வந்தனர். அந்தப் பையைக் கைப்பற்றி பரிசோதித்த போது, அதில் துணி மற்றும் பணத்தை போலீசார் கண்டுபிடித்தனர். பஸ்ஸைப் பிடிக்கச் சென்ற பயணி யாரேனும் அவசரமாக பையை விட்டுச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

திங்களன்று மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதனால் 

தனியாக எந்தப் பையக் காணும் போதும் மக்கள் பீதியில் அடைகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.