ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

பிறந்தநாளைக் கொண்டாட நேபாளம் சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்ற கேரளத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே அறையில் தங்கியிருந்தபோது மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

News image
Updated On :22 ஜனவரி 2020, 12:12 pm

PTI

காத்மாண்டு: நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்ற கேரளத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே அறையில் தங்கியிருந்தபோது மூச்சுத் திணறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தில், தங்களது மூன்று குழந்தைகளின் பிறந்த நாட்களும் ஒரே மாதத்தில் வருவதால், அதைக் கொண்டாடும் வகையில் நேபாளத்துக்கு சுற்றுலாச் சென்ற போது, அந்த குழந்தைகளும், பெற்றோர் மற்றும் குடும்ப நண்பர்கள் என 8 பேர் மரணம் அடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர், நேபாளத்தில் உள்ள மலைப் பிரதேசமான பொகாராவுக்கு சுற்றுலா வந்தனர். சுற்றுலாவை முடித்துவிட்டு மகாவன்புர் மாவட்டம் டாமன் பகுதியில் உள்ள ஹோட்டலில் திங்கட்கிழமை இரவு தங்கினர்.

அந்த 15 பேரும் மொத்தமாக 4 அறைகளை தங்களுக்காக எடுத்துக் கொண்ட நிலையில், அதில் 8 பேர் ஒரே அறையில் தங்கியுள்ளனர். செவ்வாய்க்கிழமை காலை, ஒரே அறையில் தங்கியிருந்த 8 பேரும் நினைவிழந்த நிலையில் இருந்ததைப் பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் அவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியதாக காத்மாண்டு போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

இது குறித்து மகாவன்புர் காவல்துறை கண்காணிப்பாளர் சுஷில் சிங் ரத்தௌர் கூறுகையில், அவர்களது அறையை வெப்பநிலையில் வைத்திருக்க உதவும் கேஸ் ஹீட்டரில் இருந்து வெளியான வாயுவால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 8 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.

உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில், பிரவின் குமார் நாயர் (39), சரண்யா(34), ரஞ்ஜித் குமார் டி.பி.(39), இந்து ரஞ்ஜித் (34), ஸ்ரீ பத்ரா(9), அபினவ் சோரயா(9), அபி நாயர்(7) மற்றும் வைஷ்ணவ் ரஞ்ஜித் (2) என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள். இதில் பிரவீன் குமார் நாயன் - சரண்யா தம்பதியின் மூன்று குழந்தைகளுக்கும் ஜனவரி மாதத்தில் பிறந்தநாள் வருவதை முன்னிட்டு, அவர்கள் நேபாளம் சென்று பிறந்தநாளைக் கொண்டாடவிருப்பதாக நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கூறிவிட்டுச் சென்ற நிலையில், இப்படி ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.