நேதாஜியின் 123வது பிறந்ததினம்: தலைவர்கள் மரியாதை (புகைப்படங்கள்)
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.


புது தில்லி: நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 123வது பிறந்ததினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேதாஜியின் திருவுருவப் படத்துக்கு குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் மலர்களால் மிக அழகாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் திருவுருவப் படத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நேதாஜியின் பிறந்ததினத்தை முன்னிட்டு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மலரஞ்சலி செலுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் திருவுருவப் படத்துக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் மரியாதை செலுத்தினார்கள்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில், அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் உள்ள நேதாஜின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...