மத்தியப் பிரதேச முன்னாள் அமைச்சர் மனோகர் உந்த்வால் காலமானார்
மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பாஜக எல்.எல்.ஏ.வுமான மனோகர்


போபால்: மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் அமைச்சரும், பாஜக எல்.எல்.ஏ.வுமான மனோகர் உந்த்வால் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார்.
முன்னாள் அமைச்சரும், பாஜக எல்.எல்.ஏ.,வும் ஆன மனோகர் உந்த்வால் கடந்த சில மாதங்களாக மூளை தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு குருக்கிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மருத்துவமனையில் அவரின் உயிர் பிரிந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
மனோகர் உந்த்வால் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், கடந்த 2014-ல் தேவாஸ் மக்களவைத் தொகுதியில் எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவருக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...