தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை கழிவறையில் நோயாளி தற்கொலை
புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது நோயாளி, கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.


புது தில்லி: புது தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 35 வயது நோயாளி, கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
எய்ம்ஸ் மருத்துவமனையின் கழிவறையில், குளுக்கோஸ் குப்பிகள் வைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குழாயில் தூக்கில் தொங்கிய நிலையில் நோயாளியின் உடல் மீட்கப்பட்டது. அவர் எதற்காக தூக்கில் தொங்கினார் என்ற காரணம் கண்டறியப்படவில்லை.
இன்று அதிகாலை 12.55 மணியளவில், நோயாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து காவல்நிலையத்துக்கு புகார் வந்துள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நபர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இவர் குடல் சம்பந்தமான நோய்க்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...