இந்தியாவின் பணக்கார பெண்ணான ரோஷ்னி நாடார் மல்ஹோத்ரா ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, அந்நிறுவனத்தின் தலைவராக இருந்த ஷிவ் நாடார் பதவி விலகிய நிலையில் அவரது மகள் ரோஷ்னி நாடார் பொறுப்பேற்கிறார். அதே நேரத்தில் ஷிவ் நாடார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும், தலைமை வியூக அதிகாரியாகவும் தொடருவார் என்று நிறுவனத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதான ரோஷ்னி மல்ஹோத்ரா, முன்னதாக ஹெச்.சி.எல். கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குநராகவும், தொழில்நுட்ப வாரியத்தின் துணைத் தலைவராகவும், சிவன் நாடார் அறக்கட்டளையின் அறங்காவலராகவும் இருந்தார். தற்போது நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்த்தப்பட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள 'உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள்' பட்டியலில் 2017 முதல் 2019 வரை இடம்பெற்றுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆனைமலையாறு-நல்லாறு திட்டங்கள் நிறைவேற அதிமுக வேட்பாளா் வெற்றி பெற வேண்டும்: கே.அண்ணாமலை
ஏழைகளுக்கு உண்மையான சமூக நீதி: பிரதமா் மோடி உறுதி

தவறாமல் வாக்களிப்போம்

மகிழ்ச்சி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


