வரும் நாள்களில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும்
மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக, வரும் சில நாள்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று ஆந்திர மாநில விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.


ஹைதராபாத்: மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக, வரும் சில நாள்களில், உலகின் பல்வேறு பகுதிகளில் ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று ஆந்திர மாநில விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் கடந்த வாரத்தில் வால்நட்சத்திரம் வெறும் கண்களால் பார்க்கும் வகையில் தெரிந்தது. இந்த நிலையில் தற்போது ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வானியல் விஞ்ஞானி பி.ஜி. சித்தார்த் இது பற்றி கூறுகையில், வரும் சில நாள்களில் மிகவும் அதிசயிக்கத்தக்க வானியல் நிகழ்வு நடைபெற உள்ளது. மாலை முதல் அதிகாலை வரை ஐந்து கோள்களை வெறும் கண்களால் பார்க்க முடியும். ஹைதராபாத் உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் இதனைப் பார்க்க முடியும்.
புதன், செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட ஐந்து கோள்கள் வரும் நாள்களில் மாலை முதல் அதிகாலை வரை அதாவது சூரியன் மறைந்த பிறகு வெறும் கண்கால் பார்க்க முடியும். அதன்பிறகு இருக்கும் மூன்று கோள்களை தொலைநோக்கியால் மட்டுமே பார்க்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...