அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

இதுவரை பார்த்திராத அரிய மஞ்சள் நிற ஆமை ஒடிசாவில் தென்பட்டது

ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

News image
இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை ஒடிசாவில் தென்பட்டது
Updated On :21 ஜூலை 2020, 12:58 pm

DIN


ஒடிசா மாநிலம் பாலாசோர் கடற்கரைப் பகுதியில் இதுவரை பார்த்திராத மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

ஒடிசா கடற்கரை, பல்வேறு விதமான உயிர்கள் வாழும் மிகவும் அதிசயமானப் பகுதியாகும். இங்கு பல்வேறு வகையான ஆமைகள் தென்படுவது வழக்கம்தான். ஆனால், முதல் முறையாக கடந்த ஞாயிறன்று, இதுவரை பார்த்திராத மிகவும் அரிதான மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக தென்படும் ஆமைகளில் இருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. பாலாசோர் பகுதியில் சுஜன்புர் கிராமத்தில் மிகவும் அழகான, அரிதான, முற்றிலும் மஞ்சள் நிற ஆமை கண்டறியப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது விவசாயி வாசுதேவ் மஹாபத்ரா இந்த ஆமையை பார்த்துள்ளார். பிறகு இந்த ஆமையை அவர் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். இதேப்போல சில ஆண்டுகளுக்கு முன்பு சிந்த் பகுதியில் இளஞ்சிவப்பு நிற கண்களைக் கொண்ட ஆமை கண்டறியப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.