கமேனி உயிரிழப்பு: ஈரான் ஊடகம் அதிகாரபூர்வ அறிவிப்புகமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:59 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் மாநில எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினா் இன்று காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினா். 

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்தும், கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 

அந்த வகையில் இன்று காலை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் பூஞ்ச் மாவட்டம், குவாஸ்பா பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசியும், சிறிய ரக ஆயுதங்களைக் கொண்டும் திடீரென தாக்குதல் நடத்தினா். 

இதையடுத்து, இந்திய ராணுவம் தரப்பிலும் பாகிஸ்தான் எல்லையை நோக்கி பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இந்தியத் தரப்பில் யாருக்கும் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.