பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா: ஒரு லட்சத்தை நெருங்குகிறது மொத்த பாதிப்பு 

கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :25 ஜூலை 2020, 3:26 pm

DIN

கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக கரோனா வைரஸ் பரவல் தீவிரம் அடைந்து வருகிறது. குறிப்பாக மாநில தலைநகரான பெங்களூருவில் கரோனா ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. இங்கு தினமும் சராசரியாக 2 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,072 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 90,942 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 72 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,796 ஆக உயர்ந்துள்ளது.

அதேசமயம் இன்று 2,403 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 33,750 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் அங்கு மொத்தம் 55,388 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சையில் உள்ளவர்களில் 611 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.